டி.ஏ.பியை எதிர்க்க ஒரே ஆயுதம் கெராக்கான்! பாஸ் கட்சிக்குக் கெராக்கான் நினைவூட்டல்!

top-news
FREE WEBSITE AD

செப்டம்பர் 16,

பெரிக்காத்தானின் பினாங்கு மாநிலத் தலைவர் பொறுப்பில் கெராக்கான் இருப்பதால் பாஸ் கட்சிக்கும் பெர்சத்துவுக்கும் எந்தவொரு சிக்கலையும் ஏற்படுத்தாது என கெராக்கான் கட்சியின் தலைவர் Datuk Dominic Lau நம்பிக்கை அளித்தார். பினாங்கு பாஸ் கட்சி கெராக்கான் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தினாலும் அவர்கள் மீது தமக்கு எந்தவொரு வருத்தமும் இல்லை என Datuk Dominic Lau இன்று விளக்கமளித்தார். கெராக்கான் கடந்த பொதுத் தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும் டி.ஏ.பிக்கு எதிராக அரசியல் செய்வதில் தேல்வி அடையவில்லை என Datuk Dominic Lau தெரிவித்தார்.

பினாங்கில் டி.ஏ.பிக்கு எதிராகப் பல்வேறு அரசியல் காய்களைக் கெராக்கான் நகர்த்தி வருவதைப் பாஸ் கட்சி உணர வேண்டும் என Datuk Dominic Lau நினைவூட்டினார். டி.ஏ.பியை எதிர்த்து அரசியல் செய்ய கெராக்கான் போன்ற கட்சி பெரிக்காத்தான் கூட்டணிக்குத் தேவை என்பதைப் பாஸ் கட்சியினர் உணர்ந்தால் அது பெரிக்காத்தான் கூட்டணிக்கு வலுவைச் சேர்க்கும் என Datuk Dominic Lau தெரிவித்தார். பினாங்கில் கெராக்கான், பாஸ், பெர்சத்து ஆகிய 3 கட்சிகளும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட போது அனைத்து சட்டமன்றங்களிலும் பாஸ் கட்சிக்கு முழுமையான ஆதரவைக் கெராக்கான் வழங்கியதை Datuk Dominic Lau நினைவூட்டினார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *