அந்தோணி லோக்கின் திமிரால் டி.ஏ.பி அழியும்! ம.சீ.ச கண்டனம்!

top-news
FREE WEBSITE AD

ஆகஸ்ட் 25,

டி.ஏ.பியின் திமிர் பிடித்த தலைவர்களில் அதன் பொதுச் செயலாளர் Anthony Loke முதன்மையானவர் என முன்னாள் துணை அமைச்சரும் ம.சீ.ச உதவித் தலைவருமான Datuk Seri Ti Lian Ker சாடினார். எதிர்கட்சியாக இருந்த போது ம.சீ.சவைக் குறை கூறியே கட்சி நடத்திய டி.எ.பி இப்போது ஆளும் கட்சியானதும் மீண்டும் ம.சீ.சவையே குறி வைப்பதாக Datuk Seri Ti Lian Ker தெரிவித்தார். அந்தோணி லோக் ஓர் அமைச்சர். ஓர் அமைச்சர் நாட்டின் பாரம்பரியமிக்க ஓர் அரசியல் கட்சியைத் தாக்கும்படி பொதுவெளியில் பேசுவது பொறுப்பற்ற செயல் என்பதை விடவும் ஆணவத்தின் உச்சம் என்ற்றும் திமிர் பிடித்த பேச்சு என்று எடுத்துக்கொள்ளலாம் என Datuk Seri Ti Lian Ker தெரிவித்தார். 

அந்தோணி லோக்கின்  இந்த ஆணவமான பேச்சு டி.ஏ.பியின் அழிவுக்கான ஒரு தொடக்கம் என Datuk Seri Ti Lian Ker தெரிவித்தார். பாரிசானை எதிர்க்கும் எண்ணம் ம.சீ.சவுக்கு இல்லை, அதே போல அரசாங்கத்தை எதிர்க்கும் எண்ணமும் ம.சீ.ச கொண்டிருக்கவில்லை, டி.ஏ.பியினர் அவர்கள் ஆட்சியில் இருப்பதை மறந்து விட்டு பழைய கதைகளையே பேசி வருகிறார்கள். ஆட்சியில் இருக்கும் டி.ஏ.பி இப்போது என்ன செய்கிறீர்கள்? கடந்த காலத்தில் ம.சீ.ச செய்தது தவறு எனில் இப்போது அதை மாற்றலாமே என கேட்டால், சீர்த்திருத்தம் செய்கிறோம் என்கிற பதிலை மட்டுமே டி.ஏ.பி அளிக்கிறது. அப்படி என்ன தான் சீர்த்திருத்தம் செய்கிறீர்கள் என கேள்வி கேட்டால் மீண்டும் 10 அல்லது 20 ஆண்டுகளுக்கு முந்தைய கதையைக் கட்டவிழ்கிறார்கள் என Datuk Seri Ti Lian Ker கடுமையாகச் சாடினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *