டி.ஏ.பியை வெளியேற உத்தரவிட அக்மாலுக்கு உரிமை இல்லை! – மலாக்கா டி.ஏ.பி கண்டனம்!

top-news
FREE WEBSITE AD

ஜனவரி 4,

மலாக்காவின் மாநில அரசிலிருந்து டி.ஏ.பியை வெளியேறும்படி வலியுறுத்த அக்மால் சலேவுக்கு எந்த உரிமையும் இல்லை என மலாக்கா மாநில டி.ஏ.பி தலைவர் Khoo Poay Tiong தெரிவித்தார். மலாக்காவின் முதலமைச்சராக இருக்கும்  Rauf Yusoh டி.ஏ.பியை அழைத்து கடந்த 2023 இல் மலாக்கா அரசாங்கத்தில் இணைத்தார். Rauf Yusoh வுக்கு மட்டுமே டி.ஏ.பி அரசாங்கத்தில் இருக்க வேண்டுமா வேண்டாமா என்பது குறித்து முடிவெடுக்க அனைத்து தகுதியும் உரிமையும் உள்ளது என Khoo Poay Tiong தெரிவித்தார். 

அக்மால் சலே யார்? மலாக்கா முதலமைச்சரா? கூட்டணிக் கட்சித் தலைவரா? வெறும் இளைஞர் பிரிவுத் தலைவர். அவ்வளவு தான். அக்மாலுக்கு அவருடைய பொறுப்பின் அதிகாரம் எதுவரை உள்ளது என்பது கூட தெரியாமல் வெறும் மேடை அலங்காரத்திற்காக வாய் சவடால் விடுகிறார். மலாக்கா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் அக்மாலுக்கு இல்லை. இதை அக்மால் உணர்ந்து தன்னுடைய தகுதிக்கும் பொறுப்புக்கும் மீறிய கருத்துகளை வெளியிட கூடாது என மலாக்கா மாநில டி.ஏ.பி தலைவர் Khoo Poay Tiong தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *