மக்களுக்கு இருக்கும் அறிவு எதிர்கட்சிக்கு இல்லை! – டி.ஏ.பி அமைச்சர் சாடல்!

top-news
FREE WEBSITE AD

ஆகஸ்ட் 27,

நகர்புற மறு உருவாக்கச் சட்டத்தை ஆதரித்து இன்று காலை நாடாளுமன்றத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகள் தங்களின் ஆதரவைத் தெரிவிக்கும்  வகையில் ஒன்று கூடினர். இந்த சட்டத் திருத்தத்தால் பலதரப்பட்ட குடியிருப்புவாசிகள் பயனடைவதாகவும் உள்ளாட்சி வீட்டுவசதி மேம்பாடு அமைச்சின் இந்த சட்டத்திருத்தம் மக்களுக்குத் தேவையானது எனும்படியான பதாகைகளுடன் மக்கள் ஒன்று கூடி, அதன் அமைச்சர் Nga Kor Ming-கிடம் அவர்களின் ஆதரவு கடிதத்தை வழங்கினர்.

பொதுமக்களின் ஆதரவுக் கடிதத்தை அமைச்சர் Nga Kor Ming, நகர்புற மேம்பாட்டுத் துறை தலைமை இயக்குநர் Datuk Dr Alias Rameli ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்த சட்டத்திருத்தத்தால் அதிகப்படியான அடுக்குமாடிக் குடியிருப்புகள் அரசு செலவில் புதுப்பிக்கப்படும் என்றும் பல அடுக்குமாடிக் குடியிருப்புகள் சேதமடைந்து மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் அவை புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதை மக்கள் உணர்ந்திருந்தாலும் ஒரு சில எதிர்கட்சியினர் அரசியல் நோக்கங்களுக்காக இச்சட்டத்திருத்தத்தை எதிர்ப்பதாகவும் உள்ளாட்சி வீட்டுவசதி மேம்பாடு அமைச்சர் Nga Kor Ming தெரிவித்தார். சட்டம் குறித்தான புரிதலும் அறிவும் எதிர்கட்சியினரை விடவும் பாமர மக்களுக்கு மிகுந்து இருப்பதை அமைச்சர் Nga Kor Ming சுட்டிக்காட்டினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *