இரட்டை நாக்குகள் கொண்ட டி.ஏ.பி! – பாஸ் கட்சி சாடல்!

top-news
FREE WEBSITE AD

செப்டம்பர் 21,

டி.ஏ.பியைப் போல நடிப்பவர்கள் ஒரு தவறான அரசியலுக்கு உதாரணம் என பாஸ் கட்சியின் தலைமை தொடர்பாளர் Ahmad Fadhli Shaari தெரிவித்துள்ளார். முன்னதாகப் பாஸ் கட்சி கூட்டணிக் கட்சிகளின் வளர்ச்சியைத் தடுத்து முன்னேறும் ஓர் சுயநலக் கட்சி என டி.ஏ.பி பொதுச் செயலாளரும் அமைச்சருமான ANTHONY LOKE சாடினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் கடந்த காலங்களில் பாஸ் கட்சியுடன் ஒட்டி உறவாடி வளர்ந்த டி.ஏ.பி இப்போது நன்றி உணர்வே இல்லாமல் பேசுவதாக Ahmad Fadhli Shaari தெரிவித்தார்.

பாஸ் கட்சியுடன் இருந்த டி.ஏ.பிக்கும் இப்போது இருக்கும் டி.ஏ.பிக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதாகவும் இரட்டை நாக்கைக் கொண்ட பாம்புகள் கூட இப்படி மாறுவதில்லை என Ahmad Fadhli Shaari சாடினார். உண்மையில் அடக்கி ஆளும் மனப்பான்மைக் கொண்ட கட்சி டி.ஏ.பி தான் என்பதை Ahmad Fadhli Shaari நினைவூட்டினார். ANTHONY LOKE ஒரு நல்ல கண்ணாடியை வாங்கிப் போட்டுக்கொண்டால் யார் உண்மையில் அடக்கி ஆள்வது என தெரியும். பெரிக்காத்தான் கூட்டணிக் கட்சிகளான பாஸ் கட்சியு பெர்சத்துக் கட்சியும் பிரதமர் வேட்பாளர் குறித்து முரண்பட்ட கருத்துகளைக் கொண்டிருந்தாலும் கூட்டணியின் தலைமைக் குழுவின் முடிவை இரு கட்சியினரும் ஏற்கும் என்பதை Ahmad Fadhli Shaari நினைவூட்டினார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *