தேர்தலில் டி.ஏ.பி படுதோல்வி அடையும்! முன்னாள் அமைச்சர் உறுதி!
- THINAGAREN SANGGAREN
- 15 Jul, 2026
ஜூலை 15,
எதிர்வரும் நெகிரி செம்பிலான் தேர்தலில் பாரிசான் மிக பெரும்பான்மையில் வெற்றி பெறும் என்றும் டி.ஏ.பி பாரிசானால் பந்தாடப்படும் என்றும் சட்டத்துறை முன்னாள் அமைச்சர் Datuk Zaid Ibrahim தெரிவித்தார். பாஸ் கட்சி பாரிசானுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. பாக்காத்தான் பாரிசான் என இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி செய்து வரும் நிலையில் அன்வார் பாரிசானைக் கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார். பக்காத்தான் கூட்டணிக் கட்சிகளையே அன்வார் கண்டுக்கொள்வதில்லை என Datuk Zaid Ibrahim தெரிவித்தார்.
டி.ஏ.பியின் தற்போதைய நிலமை மிகவும் பரிதாபமாக இருக்கிறது என Datuk Zaid
Ibrahim தெரிவித்துள்ளார். டி.ஏ.பியின் மூத்த தலைவரான Karpal
Singh போன்றவர்கள் இப்போது உயிரோடு இருந்திருந்தால் டி.ஏ.பியின்
பரிதாபமான நிலையால் அவாமனப்படுவார்கள். பாஸ் கட்சியுடன் பாரிசான் செய்துக்கொள்ளும்
தேர்தல் ஒப்பந்தங்கள் குறித்து அன்வாருக்கு நிச்சயம் தெரியும். ஆனால் அன்வார்
எப்போதும் போல அமைதியாகவே இருப்பார். அவர் பாரிசானுக்கு எதிராகச் செயல்பட்டால்
அவருடைய பிரதமர் நாற்காலிக்கு ஆபத்து வந்து விடும் என அன்வாருக்கு நன்றாக தெரியும்
என Datuk Zaid Ibrahim சுட்டிக்காட்டினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



