சபாவில் டி.ஏ.பியின் தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்! அந்தோணி லோக்!

top-news
FREE WEBSITE AD

நவம்பர் 30,

நேற்று நடைபெற்ற சபாவின் 17-ஆவது மாநிலங்கவை சட்டமன்றத் தேர்தலில் களம் இறங்கிய அனைத்து சட்டமன்றங்களிலும் டி.ஏ.பி கட்சி தோல்வி அடைந்திருப்பதைத் தாம் ஏற்றுக்கொள்வதாகவும் பாடம் கற்றுக்கொண்டிருப்பதாகவும் டி.ஏ.பி கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான அந்தோணி லோக் தெரிவித்தார். சபாவின் 17-ஆவது மாநிலங்கவைச் சட்டமன்றத் தேர்தலில் 8 சட்டமன்றங்களில் போட்டியிட்ட டி.ஏ.பி கட்சி அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தாலும் சபாவில் டி.ஏ.பி கட்சிக்கு 2 நாடாளுமன்றங்கள் கைவசம் இருப்பதால் தொடர்ந்து மக்கள் நலத்திட்டகளை டி.ஏ.பி முன்னெடுக்கும் என அந்தோணி லோக் நம்பிக்கை அளித்தார். 

சபாவின் தேர்தலிலிருந்து டி.ஏ.பி தேர்தல் பாடத்தைக் கற்றுக் கொள்வதாகவும் டி.ஏ.பியின் பலவீனங்களைக் கண்டறிந்து சீர்படுத்தும் பொறுப்பையும் கட்சியின் பொதுச் செயலாளர் எனும் முறையில் தாம் கொண்டிருப்பதாக அந்தோணி லோக் தெரிவித்தார். மக்களின் இந்த முடிவைச் சபா மாநில டிஏ.பி ஏற்பதாகவும் அடுத்த கட்டமாக டி.ஏ.பி கட்சியில் மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த முக்கிய முடிவுகளைத் தாம் எடுக்கவிருப்பதாகவும் டி.ஏ.பி கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான அந்தோணி லோக் தெரிவித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *