டி.ஏ.பிக்கு இது சோதனை காலம்! சீர்த்திருத்தம் அவசியம்! – துணை அமைச்சர் TEO NIE CHING!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 12,

ஜொகூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் 2 சட்டமன்றங்களை டி.ஏ.பி இழந்திருப்பதற்கு முக்கிய காரணங்களை ஆராய்ந்து வருவதாக ஜொகூர் மாநில டி.ஏ.பி தலைவரும் துணை அமைச்சருமான TEO NIE CHING தெரிவித்தார். பாரிசானின் இந்த வெற்றியை முழுமையாக ஏற்பதாகவும் தேர்தல் முடிவுகளால் மக்களிடமிருந்து டி.ஏ.பி விலகியிருக்காது என்றும் TEO NIE CHING நம்பிக்கை தெரிவித்தார். 
Johor Jaya சட்டமன்றத்தையும் Perling சட்டமன்றத்தையும் டி.ஏ.பி இழந்திருப்பதால் இது டி.ஏ.பிக்குச் சோதனையான காலமாகவே தாம் உணர்வதாகவும் ஜொகூர் மாநில டி.ஏ.பியில் முக்கிய சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை இந்த தோல்வி உணர்த்துவதாகவும் TEO NIE CHING தெரிவித்தார். 

JOHOR மாநிலத் தேர்தலில் பக்காத்தான் கூட்டணியில் பி.கே.ஆர் 20 சட்டமன்றங்களில் போட்டியிட்டு 1 சட்டமன்றத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பக்காத்தானின் மற்றொரு கூட்டணி கட்சியான அமானா கட்சி 19 சட்டமன்றங்களில் போட்டியிட்டு 1 சட்டமன்றத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. டி.ஏ.பி கட்சி 17 சட்டமன்றங்களில் போட்டியிட்டு 6 சட்டமன்றங்களில் பெற்றிருக்கும் வெற்றி நிறைவானது இல்லை என்றாலும் இழந்த சட்டமன்றங்களை மீண்டும் பெறுவதற்கான நடவடிக்கையில் ஜொகூர் மாநில டி.ஏ.பி மேற்கொள்ளும் என ஜொகூர் மாநில டி.ஏ.பி தலைவரும் துணை அமைச்சருமான TEO NIE CHING தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *