சபா மாநிலத்தில் DAP எந்தப் பதவியும் ஏற்காது – அந்தோணி லோக் அறிவிப்பு

top-news

செய்தி- வெற்றி மைந்தன்

கோலாலம்பூர், டிச. 2-

சபா மாநிலத்தில் நடைபெற்ற மாநிலத் தேர்தலில் படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து, DAP சபா எந்த அரசுப் பதவியையும் ஏற்க மாட்டாது என்று முடிவு செய்துள்ளது. நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி உட்பட எதுவும் ஏற்கப்படாது என்று கட்சி தெளிவுபடுத்தியுள்ளது.

DAP தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் இன்று வெளியிட்ட அறிக்கையில், “சபா DAP இன்று காலையில் நடைபெற்ற அவசர மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவை ஒருமனதாக எடுத்தது. நாங்கள் அரசாங்க அமைப்பில் இடம்பெற மாட்டோம்” என்றார்.

தேர்தல் முடிவுகள் DAP, பக்காத்தான் ஹராப்பானுக்கு எதிராக மக்களிடம் பெரும் நம்பிக்கை நெருக்கடி இருப்பதை வெளிப்படுத்துவதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.

“அரசுப் பதவிகளில் இல்லாவிட்டாலும், சபா DAP தலைவர்களும் உறுப்பினர்களும் மக்களுக்கான சேவையைத் தொடர்ந்து செய்வார்கள். மக்களின் இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறுவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துவோம்” என்று அந்தோணி லோக் உறுதியளித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *