டி.ஏ.பிக்கு நாகரீகம் இல்லை! சுல்தானை எதிர்க்கிறதா டி.ஏ.பி? அம்னோ கண்டனம்!
- THINAGAREN SANGGAREN
- 20 May, 2026
மே 20,
மலாய் ஆட்சியாளர்களை டி.ஏ.பியினர் கேலி செய்யும்படியாகச் செயல்படுவதை அம்னோ வன்மையாகக் கண்டிக்கிறது என அம்னோ பொதுச் செயலாளர் Datuk Dr Asyraf Wajdi Dusuki கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். முன்னதாகச் சிலாங்கூர் சுல்தான் டி.ஏ.பி சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் தேசிய கோட்பாடுகளை உணர்ந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். சிலாங்கூர் சுல்தானுக்குப் பதிலளிக்கும் வகையில் டி.ஏ.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் Tony Pua மலாய் ஆட்சியாளர்கள் குறிப்பாகச் சுல்தான்கள் சட்டத்திற்கும் மேலானவர்கள் அல்ல என்றும் அரசியல்வாதிகள் சட்டத்தைப் பின்பற்றி இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அரசியலமைப்பு முடியாட்சியைப் பின்பற்றும் மலேசியாவில் சுல்தான்களின் அதிகாரம் மலாய் பழக்க வழக்கங்கள், இஸ்லாமிய விவகாரம், மாநிலச் சட்டமன்றத்தைக் கலைக்கவும் தேர்தலில் வெற்றிப் பெற்றவர்களுக்கு ஆட்சியமைக்க வழிவகுப்பது போன்ற அம்சங்கள் மட்டுமே சுல்தான்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ளதாக Tony Pua தெரிவித்தார். டி.ஏ.பி Tony Puaவின் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் கருத்து சுதந்திரம் என்பது சுல்தான்களை அவமதிக்கும் வகையில் இருக்க கூடாது என அம்னோவின் பொதுச் செயலாளர் Datuk Dr Asyraf Wajdi Dusuki கண்டனத்தைத் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



