60 ஆண்டுகளைக் கடந்த டி.ஏ.பி! புதிய வியூகம்!
- THINAGAREN SANGGAREN
- 20 Mar, 2026
மார்ச் 20,
மலேசியாவில் அசைக்க முடியாத ஓர் அரசியல் கட்சியாக உருவாகியிருந்து டி.ஏ.பி கட்சியின் 60 ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு டி.ஏ.பி புதிய அரசியல் வியூகத்தை உருவாக்கியிருப்பதாக அமைச்சரும் டி.ஏ.பி கட்சியின் துணைப் பொது செயலாளருமான STEVEN SIM தெரிவித்தார். DEVAN NAIR, CHEN MAN HIN ஆகிய இருவரும் இணைந்து 1965 அக்தோபர் 11 டி.ஏ.பி கட்சியைத் தொடங்கினாலும், 1966 மார்ச் 18 டி.ஏ.பி எனும் கட்சி அங்கீகாரம் பெற்றது.
கடந்த பொதுத் தேர்தலில் டி.ஏ.பி கட்சி 40 நாடாளுமன்றங்களில் வெற்றி பெற்றதுடன் மாநிலங்கவையில் 86 சட்டமன்றங்களைக் கொண்டிருக்கும் ஆளுமை மிக்க அரசியல் கட்சியாக மலேசியாவில் விளங்குகிறது. தற்போதைய அமைச்சரவையில் டி.ஏ.பி 5 அமைச்சர் பதவிகளிலும் 7 துணை அமைச்சர் பதவிகளிலும் 5 மக்களவை உறுப்பினர்கள் என ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் வலுவான அரசியல் கட்சியாகவும் திகழ்கிறது.
இன வேறுபாடுகளைத் தாண்டிய சமத்துவம் மற்றும் தேசிய அடையாளத்தை வலியுறுத்தும் DAP-இன் பழைய கொள்கைகளுடன் ஒத்துப்போகும் வகையில் புதிய கொள்கையும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மலேசியா மலேசியர்களுக்கெ எனும் கொள்கையை டி.ஏ.பி அறிமுகப்படுத்தியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



