உதயநிதி ஒரு "இன்ஸ்டாகிராம் முதலமைச்சர்" விமர்சித்த எடப்பாடி பழனிசாமி!
- Muthu Kumar
- 16 Feb, 2026
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS), ஆளும் திமுக அரசு மற்றும் அதன் தலைவர்கள் மீது முன்வைக்கும் கடுமையான தனிநபர் விமர்சனங்கள் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஈரோடு பவானிசாகர் தொகுதி அரியப்பம்பாளையம் பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணி தானாக அமைந்தது. இது வலிமையான கூட்டணி. திமுக - காங்கிரஸ் கூட்டணி இருப்பது சந்தேகம். காங்கிரஸ் ஆட்சியில் பங்கு தர வேண்டும், தங்களுக்கு உரிய மரியாதை கொடுக்காவில்லை என்றால் பதிலடி கொடுப்போம் என்று காங்கிரஸ் எம்பி ஒருவர் கூறியுள்ளார். காங்கிரஸ் - திமுக கூட்டணி கலக்கத்தில் உள்ளது. திமுக கெஞ்சிக்கொண்டு இருக்கிறது.
பழைய திரைப்படத்தில் ஒரு பாடல் இருக்கிறது.. இரவினில் ஆட்டம்.. பகலில் தூக்கம் என்று.. உதயநிதி ஸ்டாலின் அப்படித்தான் இருக்கிறார்.. இரவில் என்ன செய்கிறார்.. இரவில் ஆடுகிறார்,பகலில் தூங்குகிறார்.மக்களை பார்க்கமால் இருக்கிறார்
இதெல்லாம் போக அவர் என்ன செய்கிறார், இன்ஸ்ட்டாகிராமில் ஆட்டம் போடுகிறார். அங்கே ஒரு விஷயத்திற்கு லைக் போடுகிறார்.. நான் சொல்லவில்லை.. நீங்களே என்ன செய்தார் என்று பாருங்கள்.. இப்படிப்பட்ட நபர் தமிழ்நாட்டிற்கு தேவையா ? இவரெல்லாம் துணை முதல்வராக இருக்க வேண்டுமா?,
எப்போது பார்த்தாலும் எடப்பாடி எப்படி வந்தான் தெரியுமா என்று கேட்பார்கள். நான் புகுந்து வந்தேன். பறந்து வந்தேன் என்பார்கள்.. நான் எப்படியோ வந்துவிட்டேன்ல.நான் உழைத்து வந்தேன் என்று எடப்பாடி பழனிச்சாமி ஆவேசமாக பேசத்தொடங்கினார்.
சமீபத்திய பொதுக்கூட்டங்களில் பேசிய எடப்பாடி பழனிசாமி, கொள்கை ரீதியான விமர்சனங்களைத் தாண்டி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் உடல்நிலை குறித்து கடுமையான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். "தனது கைகளை உயர்த்தினால் விரல்கள் நடுங்காது" என்று கூறியதன் மூலம் முதலமைச்சரை மறைமுகமாக அவர் கேலி செய்ததாக திமுகவினர் கொந்தளித்துள்ளனர்.
அதேபோல், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இன்ஸ்டாகிராம் செயல்பாடுகள் மற்றும் சமூக வலைதளப் பதிவுகளையும் இபிஎஸ் கடுமையாகச் சாடியுள்ளார். உதயநிதி ஒரு "இன்ஸ்டாகிராம் முதலமைச்சர்" போலச் செயல்படுவதாகவும், மக்கள் பிரச்சனைகளை விட சமூக வலைதள மோகமே அவரிடம் அதிகமாக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



