விஜய் சந்தோஷத்திற்கு எதிர்பார்க்காத அளவுக்கு இறங்கிய எடப்பாடி!
- Muthu Kumar
- 17 Oct, 2025
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் உடன் கூட்டணி வைக்க எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக முயன்று வரும் நிலையில்,இதற்கான பணிகளை எடப்பாடி பழனிசாமி தீவிரமாக முன்னெடுத்து வருகிறார்.
தேமுதிக - அதிமுக இரண்டும் கூட்டணி வைத்து தேர்தலில் திமுகவை வீழ்த்திய அரசியல் வரலாறு தமிழ்நாட்டில் மறக்க முடியாதது. அதேபோன்ற வரலாற்றை மீண்டும் விஜயை வைத்து செய்யலாம் என்ற திட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார் என்றே தோன்றுகிறது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு 40+ இடங்கள் மற்றும் துணை முதல்வர் பதவி கொடுக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக விஜயிடம் எடப்பாடி பழனிசாமி ரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜயுடன் அதிமுக சார்பாக கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 48 மணி நேரமாக அதிமுக டாப் தலைகள் சிலர் விஜயுடன் நெருக்கமாக பேசி வருவதாக தகவல்கள் வருகின்றன. பாஜக கூட்டணியில் இருக்கும் நடிகர் ஒருவரும் விரைவில் விஜயுடன் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
நேற்று சட்டசபையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ஒரே இரவில் 39 சடலங்களுக்கு உடற்கூராய்வு (பிரேதப் பரிசோதனை) எவ்வாறு நடத்தப்பட்டது என்றும், ஏன் இவ்வளவு அவசரம் என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் சென்று கள்ளச்சாராயத்தில் பலியான நபர்களின் குடும்பங்களை பார்க்காத ஸ்டாலின்,இங்கு மட்டும் ஏன் சென்றார். அமைச்சர்கள் அங்கு செல்லாத போது இங்கு மட்டும் அமைச்சர்கள் செல்வது ஏன்?
தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் என்பது நிச்சயம் தவிர்க்கப்பட்டிருக்கும். விஜயின் பிரச்சாரம் கரூருக்கு முன்பு நான்கு மாவட்டங்களில் நடைபெற்றது. அக்கூட்டங்களில் திரண்ட மக்கள் எண்ணிக்கையின் அடிப்படையில், காவல்துறையும் உளவுத்துறையும் அரசுக்கு ஒரு தகவலைக் கொடுத்திருக்கும்.
அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால், இத்தகைய சம்பவம் நிகழ்ந்திருக்காது. போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி வேலுச்சாமிபுரத்தில் அதிமுக கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டபோது, அதே பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டும் எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது, என்று கேள்வி எழுப்பினார்.
அதிமுக கூட்டணியில் தவெக இணைய உள்ளதாக எடப்பாடி பழனிசாமி சூசகமாகப் பேசியுள்ளார். குமாரபாளையம் தேர்தல் பரப்புரையில், அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, கூட்டத்திற்கு நடுவே சிலர் தவெக கொடியை உயர்த்தி உற்சாகமாக கோஷமிட்டனர். அப்போது, 'கொடி பறக்குது, கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது ஸ்டாலின் அவர்களே,இந்த ஆரவாரம் உங்கள் செவியைத் துளைக்கும்' எனக் கூறினார் எடப்பாடி பழனிசாமி.
ஏற்கனவே எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் தொலைபேசியில் உரையாடினார். இந்த உரையாடலில் பல முக்கியமான விஷயங்கள் பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை அகற்ற, தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த போன் காலில் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிமுக வட்டாரம் கூறும் பொழுது கூட்டணிக்கு வருகிறீர்களா? என்று எடப்பாடி பழனிசாமி கேட்டார். இதற்கு விஜய் நோ சொல்லவில்லை. நான் மக்களை சந்திக்க போகிறேன். மீண்டும் பிரச்சாரத்தை தொடங்க போகிறேன், என்று கூறியதாக தெரிவித்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



