டத்தோ RRM கிருஷ்ணன் காலமானார்! - தமிழ் இளைஞர் மணிமன்றம் இரங்கல்!

top-news
FREE WEBSITE AD

நவம்பர் 16,

தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் மேனாள் தலைவர் டத்தோ  டத்தோ ஆர்.ஆர்.எம். கிருஷ்ணன் இன்று தனது 74 ஆவது வயதில் காலமானார். மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் முன்னாள் தலைவரான  டத்தோ ஆர்.ஆர்.எம். கிருஷ்ணனுக்குத் தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் மன்ற மணிகள் இரங்கல் பின்வருமாறு

 மலேசியத் தமிழ்ச் சமூகத்தின் கல்விசமூகப் பணிகளுக்கு அரும்பாடுபட்டவரும்மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் நான்காவது தேசியத் தலைவருமான மணிப்பூஷன்மணிச்சுடர், மணிச்செம்மல் டத்தோ ஆர்.ஆர்.எம். கிருஷ்ணன் அவர்கள் இன்று (நவம்பர் 16) நாளில் தமது 74வது வயதில் இயற்கை எய்தினார் என்ற துயரச் செய்தியை ஆழ்ந்த துயரத்துடனும் கனத்த இதயத்துடனும் தெரிவித்துக் கொள்கிறோம்.

1951 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் ஈப்போவில் பிறந்த டத்தோ ஆர்.ஆர்.எம். கிருஷ்ணன் அவர்கள்தமது வாழ்க்கையை மருத்துவத் துறையிலும் சமூகப் பணியிலும் அர்ப்பணித்து வாழ்ந்தவர் ஆவார். 1971 ஆம் ஆண்டு தற்காலிக ஆசிரியராகத் தமது பணியைத் தொடங்கிய இவர்பின்னர் மருத்துவம் பயின்று மக்கள் சேவையில் ஈடுபட்டார். இவர் 1974 ஆம் ஆண்டு மலேசிய மருத்துவ உதவியாளராகத் தேர்ச்சி பெற்று நிரந்தரப் பணியில் சேர்ந்தவர். தன்னுடைய பணிக்கால ஓய்வுக்குப் பிறகும்எம்.எஸ்.யூ. பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கு மருத்துவமனை உதவியாளர் துறையில் பயிற்சி அளித்துவழிகாட்டி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 மணிமன்றத்தின் உறுப்பினராக 1971 ஆம் ஆண்டு இணைந்த இவர்மாநிலதேசியப் பொறுப்புகளில் படிப்படியாக உயர்ந்துமணிமன்றத்தின் வளர்ச்சிக்குத் தன்னலமற்ற பங்களிப்பை வழங்கினார். 1980 முதல் 1988 ஆம் ஆண்டு வரை தேசியப் பொருளாளராகவும்1989 முதல் 1990 வரை தேசியத் துணைத் தலைவராகவும் மணிமன்றத்திற்குச் சேவை செய்தவர். 1990 முதல் 2004 ஆம் ஆண்டு வரை சுமார் 15 ஆண்டுகள் மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் தேசியத் தலைவராகப் பதவி வகித்த இவர்மணிமன்ற வரலாற்றில் நீடித்த சேவை செய்த தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். டத்தோ அவர்களின் அயராத உழைப்பாலும் முன்னாள் பொதுப்பணி அமைச்சரும், மஇகாவின் மேனாள் தேசியத் தலைவருமாகிய டத்தோ ச.சாமிவேலு அவர்களின் உதவியாலும் மணிமண்டபம் கடனில் இருந்து மீண்டது. இவரின் காலக்கட்டத்தில் தான் மணிமன்ற உறுப்பினர் பதிவேடும் பதிவு புத்தகமும் எல்லா மன்றங்களுக்கும் வழங்கப்பட்டது. தேசியப் பேராளர் மாநாடுகளை 5 நட்சத்திர தங்கும் விடுதிகளில் நடத்திய பெருமையும் இவரயே சேரும். டத்தோ அவர்கள் மணிமன்ற மணிகளின் மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு எண்ணற்ற நிகழ்வுகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு அதிக இளைஞர்களை மணிமன்றத்தில் இணைக்கும் திட்டத்தில் வெற்றியும் கண்டார். 

பொது வாழ்க்கையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்த இவருக்கு, மாட்சிமை தாங்கிய மாமன்னரும் மேன்மை தாங்கிய மாநில சுல்தான்களும் ஆளுநாரும் பல்வேறு விருதுகளை வழங்கி இவரது சேவையை கெளரவித்துள்ளனர்அவரது தன்னலமற்ற சேவையினைப் பாராட்டி A.M.N., A.N.S., A.M.P., B.C.M., P.M.C., P.J.K., P.P.B.M., போன்ற அரசாங்க விருதுகளும் “தொக்கோ பெலியா”, “தொக்கோ பெலியா பெர்ஜாசா” போன்ற இளைஞர் நாள் விருதுகளும் மணிமன்றங்களின் உயரிய விருதுக்கான மணிப்பூஷன், மணிச்சுடர், மணிச்செம்மல் போன்ற இளையோர் சேவைக்கான விருதுகளும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.     

 மணிச்சுடர் டத்தோ ஆர்.ஆர்.எம். கிருஷ்ணன் அவர்கள் தனது இளமைக் காலம் முதல் மலேசிய இந்தியர் காங்கிரஸில் (ம.இ.கா.) தீவிரமாகச் செயல்பட்டவர். 1971ஆம் ஆண்டு நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள ம.இ.கா பாஜம் கிளையில் ஓர் உறுப்பினராக சேர்ந்தார். 1997ஆம் ஆண்டு முதல் இன்று வரை ம.இ.கா சிரம்பான் தொகுதியில் சிகாமாட் கிளைத் தலைவராகப் பொறுப்பு வகித்துதேசிய அரசியலிலும் தமிழ்ச் சமூக நலனுக்காகக் குரல் கொடுத்தவர். டத்தோ ஆர்.ஆர்.எம். கிருஷ்ணன் அவர்கள் மலேசியத் தமிழ்ச் சமூகத்தின் கல்விஇளைஞர் மேம்பாடு மற்றும் அரசியல் களத்தில் சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்ட ஒரு மூத்த தலைவராகப் போற்றப்படுகிறார். அவர் மலேசியத் தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றத்திற்காகப் பல்துறைகளிலும் பணியாற்றியசமூகப் பொறுப்புணர்வு மிக்க ஒரு வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.

 டத்தோ ஆர்.ஆர்.எம். கிருஷ்ணன் அவர்களின் மறைவுக்கு மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவையின் பொறுப்பாளர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். "தமது இளமைக் காலம் முதல் தமது ஓய்வுக் காலம் வரை மணிமன்றமே தமது உயிர் என்று வாழ்ந்த தலைவர் டத்தோ ஆர்.ஆர்.எம். கிருஷ்ணன் அவர்களின் மறைவுஎங்களுக்கு விழுந்த பேரிடி. அவரது உழைப்பாலும் தன்னலமற்ற தலைமையாலும் மணிமன்றம் மீண்டும் வீறுபெற்று எழுந்தது. அவரது வழிகாட்டுதலும்மணிமன்றத்தின் நிதிப் பாதுகாப்பிற்காக அவர் மேற்கொண்ட அரும் முயற்சிகளும் என்றும் எங்களுடன் நிலைத்திருக்கும். ஒரு தலைமுறையை வழிநடத்திய தலைவரான இவரைமணிமன்றம் என்றும் நினைவில் கொள்ளும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

டத்தோ ஆர்.ஆர்.எம். கிருஷ்ணன் அவர்களின் மறைவுமலேசியத் தமிழ்ச் சமூகத்திற்கும் குறிப்பாக இளைஞர் மணிமன்றத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். மலேசியத் தமிழ்ச் சமூகம் என்றென்றும் அவரது சேவையை நன்றியுடன் நினைவுகூரும்.

 “கண்களுக்குத் தென்படாமல் மறைந்தாலும், எங்கள் இதயங்களிலிருந்து ஒரு போதும் மறைய மாட்டார்”.

அவர் அமரராகிறார்! அவர் புகழ் என்றும் அழியாது!

நன்றி ; தமிழோடு உயர்வோம்.

வெளியீடு   : மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றப் பேரவை

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *