அங்கீகரித்து நம்பிக்கை ஊட்டிய பிரதமருக்கு நன்றி - டத்தோஶ்ரீ ரமணன்
- Tamil Malar (Reporter)
- 16 Dec, 2025
புத்ராஜயா, டிச. 16-
மலேசியாவின் புதிய மனிதவள அமைச்சராக நியமிக்கப்பட்ட டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு மிகுந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார். தமது சேவையை அங்கீகரித்து நம்பிக்கை ஊட்டும் வகையில் முழு அமைச்சர் பதவியை வழங்கிய பிரதமருக்கு அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
இந்த நியமனம், நாட்டின் தொழிலாளர் மேம்பாட்டு செயல்திறனை முழுமையான, போட்டித்திறன் கொண்ட மேலும் வலுப்படுத்துவதற்கான பெரிய பொறுப்பாகும். இது மலேசியா மடானி கொள்கைக்கு ஏற்ப அமையும் என்று அவர் மேலும் கூறினார்.
அமைச்சர் பதவி பிரமானத்திற்குப் பிறகு, மனித வள அமைச்சின் உயர்தமட்ட அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.
"இந்த பொறுப்பை முழு அர்ப்பணிப்புடனும் உறுதியுடனும் நிறைவேற்றுவேன். மலேசிய மக்களின், குறிப்பாக இந்திய சமூகத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி, மலேசியா மடானி கொள்கைகளுக்கு ஏற்ப நாட்டை முன்னேற்றுவேன்" என்று டத்தோஶ்ரீ ரமணன் உறுதியளித்தார்.
இதனிடையே, கடந்த இரு ஆண்டுகளாக பணியாற்றிய தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சுக்கும் அதன் அதன் அனைத்து ஊழியர்களுக்கும் ஆழ்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



