கோலாலம்பூர் நகராண்மைக்குப் புதிய மேயர்!
- Thinagaren Sanggaren
- 14 Nov, 2025
நவம்பர் 14,
கோலாலம்பூர் நகராண்மைக் கழகத்தின் புதிய மேயராக Datuk Fadlun Mak Ujud நியமிக்கப்பட்டுள்ளார். கூட்டரசு வளாக அமைச்சர் Datuk Seri Dr Zaliha Mustafa கோலாலம்பூர் மேயருக்கான நியமனக் கடிதத்தை 58 வயதான Datuk Fadlun Mak Ujudக்கு வழங்கினார். மாமன்னரின் ஒப்புதலுடன் இந்த நியமனம் வழங்கப்பட்டிருப்பதாக Datuk Seri Dr Zaliha Mustafa தெரிவித்தார். மலேசியத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நகர்புற மேம்பாட்டுத் துறையில் பட்டம் பெற்ற Datuk Fadlun Mak Ujud 28 ஆண்டுகள் கிராமிய நகர்புற மேம்பாட்டுத் துறைகளில் தலைமை நிர்வாகியாகப் பணியாற்றியுள்ளார்.
இதற்கு முன்னதாகக் கோலாலம்பூர் மேயராக இருந்த Datuk Seri Dr Maimunah Mohd Sharif 17 நவம்பர் முதல் Petronas நிறுவனத்தின் உரிமைகள் மன்ற ஆலோசகராக நியமிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Datuk Seri Dr Maimunah Mohd Sharif முன்னதாக முதல் பெண் மேயர் எனும் வரலாற்றைப் படைத்ததைத் தொடர்ந்து தற்போது அனைத்துலக நிறுவனமான Petronas நிறுவனத்தின் முதல் பெண் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



