அரசியல்வாதிகளுக்குக் கொலை மிரட்டல் விடுத்த 3 உள்ளூர்வாசிகள் கைது! டத்தோக் குமார் அதிரடி!
- Thinagaren Sanggaren
- 12 Sep, 2025
செப்டம்பர் 12,
அரசாங்கத்தின் தலைமை பொறுப்புகளிலிருக்கும் அரசியல் தலைவர்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலமாக கொலை மிரட்டல் விடுத்த மூன்று உள்ளூர்வாசிகளைத் தேசிய காவல்துறை சிறப்புப் படை கைது செய்திருப்பதாகப் புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குநர் Datuk M Kumar தெரிவித்தார். கடந்த திங்கட் கிழமை முதல் 3 வெவ்வேறு பதிவுகள் கொண்ட காணொலிகள் சமூகவலைத்தலங்களில் பரவியதைத் தொடர்ந்து சம்மந்தபட்ட மிரட்டல்களை விடுத்த மூவரையும் அடையாளம் கண்டு கைது செய்திருப்பதாக Datuk M Kumar தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் 27 வயது 35 வயது மற்றும் 69 வயது முதியவர் என்றும், மூவரும் மலேசியர்கள் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாக Datuk M Kumar தெரிவித்தார். பொது ஒழுங்கிற்குப் பாதகம் விளைவிக்கும் கருத்துகளைப் பதிவு செய்ததாக Jibbie Sahaq, Ayien Rose ஆகிய இரு சமூக வலைத்தலங்களையும் முடக்கியிருப்பதாக புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குநர் Datuk M Kumar தெரிவித்தார். நாட்டை வழிநடத்தும் முக்கிய தலைவர்களைக் குறிவைத்து அபாயகரமானக் கருத்துகளை வெளியிட்டதற்காக அவர் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாக புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குநர் Datuk M Kumar விளக்கமளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



