சாலை பழுது நடவடிக்கை! குத்தகையாளர்களுக்குச் சம்மன்!

top-news
FREE WEBSITE AD

மே 21,

கோலால்பூரின் முக்கிய சாலைகளில் மேற்கொள்ளப்படும் சாலை பழுது பார்க்கும் பணிகளின் போது முறையான பாதுகாப்புகளைப் பின்பற்றாத குத்தகையாளர்கள் மீது கோலாலம்பூர் நகராண்மைகாக் கழகம் அபராதம் விதித்துள்ளது. இன்று நள்ளிரவு 2 மணிக்குக் கோலாலம்பூரின் Jalan Tun Perak, Tun Tan Sambathan, Jalan Maarof, Jalan Travers, Jalan Changkat Thamby Abdullah ஆகிய சாலைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் 5 குத்தகையாளர்களுக்கு 9 சம்மன்கள் வழங்கப்பட்டிருப்பதாக கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது.


சாலைகள் பழுது நடவடிக்கையின் போது அபாய விளக்குகள் இல்லாதது, சாலை கண்காணிப்பாளர் இல்லாதது, சாலையோர மின்கம்பங்களைச் சேதப்படுத்தியது, அனுமதியின்றி சாலைகளை மூடியது, நள்ளிரவில் குடியிருப்புப் பகுதிகளில் முன் அறிவிப்புகள் இல்லாமல் பழுது நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகளில் முறை முன் அனுமதி பெறாமல் செயல்பட்டதால் சம்மன் வழங்கப்பட்டிருப்பதாகவும் 14 நாட்களுக்குள் சம்மனைச் செலுத்த தவறினால் குத்தகையாளரின் உரிமம் ரத்து செய்யபடும் என கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் வலியுறுத்தியது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *