தலைநகரில் 84 வெளிநாட்டினர் கைது! 2 உணவகங்கள் மூடியதுடன் 26 கடைகளுக்குச் சம்மன்!
- Thinagaren Sanggaren
- 30 Nov, 2025
நவம்பர் 30,
தலைநகரில் உள்ள உணவகங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் சட்டவிரோதமாகப் பணிக்கு அமர்த்தப்பட்ட 84 வெளிநாட்டினர்களைக் கைது செய்துள்ளதாகக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது. குடிநுழைவுத் துறை, உள்நாட்டு வாழ்க்கை செலவீன அமைச்சு, பதிவுத் துறை, நிறுவன ஆணையம் ஆகிய அரசு துறைகளின் கூட்டு முயற்சியில் தலைநகரின் Bukit Bintang பகுதியில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாகக் கோலாம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது.
முறையான சுகாதாரத்தைக் கொண்டிருக்காத 2 உணவகங்களை மூடியதாகவும் சட்டவிரோதமாக வெளிநாட்டினர்களைப் பணிக்கு அமர்த்தியதற்காக 6 நிறுவனங்களுக்கு 26 சம்மன்கள் வழங்கப்பட்டிருப்பதாகக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது. 50க்கும் மேற்பட்ட உணவகங்களில் சோதனையை மேற்கொண்டதில் 115 வெளிநாட்டினர்களை ஆய்வு செய்ததாகவும் Bangladesh, India, Pakistan, Nepal, Myanmar, Yaman, Indonesia, Vietnam ஆகிய நாடுகளைச் சேர்ந்த 84 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கோலாம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



