தலைநகரில் மலிவு விலையில் மதுபானங்கள்! 4 கடைகளை மூடிய DBKL!
- THINAGAREN SANGGAREN
- 06 Mar, 2026
மார்ச் 6,
மலிவு விலையில் மதுபானங்களை விற்பனை செய்து வந்த 4 வணிக வளாகங்களைக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் மூடியது. தலைநகர் Petaling Street, Taman Maluri, Amber Business Plaza ஆகிய முதன்மை சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த கடைகளில் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம், உள்நாட்டு வர்த்தகம் வாழ்க்கை செலவீன அமைச்சு, சுங்கத்துறை ஆகிய அரசு அமலாக்க அதிகாரிகள் நேற்றிரவு இச்சோதனையை மேற்கொண்டதாகக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது.
மதுபானங்களை விற்பனை செய்வதற்கான சிறப்பு வணிக உரிமம் இல்லாததால் 2 கடைகளும், போலி முத்திரைகளுடன் உள்ளடங்கிய மலிவு விலை மதுபானங்களை விற்பனை செய்த குற்றத்திற்காக 2 கடைகளும் என மொத்தம் 4 கடைகளின் வணிக உரிமத்தை ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும் வணிக உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது. வணிக வளாகங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மலிவு விலையிலான மதுபானங்களைத் தேசிய சுங்கத்துறை பறிமுதல் செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



