தலைநகரில் சட்டவிரோத பார்கிங் சேவை! ஐவர் கைது! – DBKL
- THINAGAREN SANGGAREN
- 09 Apr, 2026
ஏப்ரல் 9,
தலைநகரின் முக்கிய சாலையோரங்களில் வாகனங்களை
நிறுத்த கட்டணம் வசூலித்து வந்த ஐவரைக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் கைது செய்துள்ளது.
தலைநகர் கோலாலம்பூரில் Jalan
Ampang, Jalan Ipoh, Jalan Chan Sow Lin ஆகிய பகுதிகளில் வாகனங்களை நிறுத்த ஒரு
கும்பல் கட்டணம் வசூலிப்பதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் நேற்றிரவு கோலாலம்பூர்
நகராண்மைக் கழகத்தின் அமலாக்க அதிகாரிகள் சம்மந்தப்பட்ட பகுதியைச் சோதனையிட்டதாகவும் கட்டணம் வசூலிக்கும் கும்பலைச் சேர்ந்த ஐவரைக் கைது செய்திருப்பதாகவும்
கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட ஐவரின் இருவர் உள்ளூர்வாசிகள்
என்றும் ஒருவர் Bangladesh நாட்டவர் என்றும் மேலும் இருவர் இந்தியாவைச்
சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டது. கைது செய்யப்பட்ட ஐவரும் தொழில்சாலை ஊழியர்கள்
என்றும் பகுதி நேரமாகச் சாலையோரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்குக் கட்டணம் வசூலித்து
வந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட ஐவருக்கும்
தலா RM 1,500 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டதுடன் மேலதிக
விசாரணையைத் தொடரும்படி கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



