தலைநகரில் அதிகரிக்கும் பாலியல் தொழில் வளாகங்கள்! DBKL நடவடிக்கை!

- Sangeetha K Loganathan
- 27 Apr, 2025
ஏப்ரல் 27,
தலைநகரின் முக்கிய வணிகக் கடைகளின் மேல்தலங்கள் பாலியல் தொழில் வளாகங்களாகச் செயல்படுவதாகக் கண்டறிந்த கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் நேற்று இரவு மேற்கொண்ட சோதனையில் 4 பாலியல் வளாகங்களை மூடியது. சம்மந்தப்பட்ட பாலியல் வளாகங்கள் உடல் பயிற்சி மையங்கள் எனும் அடையாளத்துடன் நடத்தப்பட்டு வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பாலியல் தொழிலில் ஈடுப்பட்ட உள்ளூர் பெண்களும் வெளிநாட்டுப் பெண்களும் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவர்களிடம் விசாரணையை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட 4 வளாகங்களில் வணிக உரிமைகளை உடனடியாக ரத்து செய்வதுடன் உரிமையாளர்களை உடனடியாக கோலாலம்பூர் நகராண்மைக் கழகத்தில் ஆஜராகும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.
DBKL menutup empat pusat aktiviti pelacuran yang beroperasi atas nama pusat kecergasan di Kuala Lumpur. Wanita tempatan dan asing ditahan untuk siasatan. Lesen perniagaan dibatalkan serta-merta, dan pemilik premis diarahkan hadir ke DBKL.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *