போக்குவரத்துக்கு நெரிசலை ஏற்படுத்தி 10 வாகனங்கள் பறிமுதல்! 119 சம்மன்கள்! – DBKL!
- Thinagaren Sanggaren
- 29 Jan, 2026
ஜனவரி 29,
தலைநகரில் போக்குவரதுக்கு நெரிசலை ஏற்படுத்தும் வாகனங்களுக்குக் கோலாம்பூர் நகராண்மைக் கழகம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என தெரிவிதுள்ளது. நேற்றிரவு தலைநகர் Jalan Ampang, Persiaran KLCC, Jalan P. Ramlee, Jalan Alor, Jalan Bukit Bintang ஆகிய சாலைகளின் ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 வாகனங்களைப் பறிமுதல் செய்ததாகவும் 119 சம்மன்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது.
கோலாலம்பூர் போக்குவரத்து ஆணையம், கோலாலம்பூர் காவல்துறை ஆகிய அமலாக்க அதிகாரிகளுடன் இரவு 9 மணிக்குத் தொடங்கிய சோதனை நடவடிக்கை நள்ளிரவு 1 மணிக்கு நிறைவடைந்ததாக கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது. கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் 95 சம்மன்களும், காவல்துறை 17 சம்மன்களும், JPJ 7 சம்மன்களும் என மொத்தம் 119 சம்மன்கள் நேற்றிரவு வெளியிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் அபராதத் தொகையைச் செலுத்தி வாகனங்களை மீட்டுக்கொள்ளும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



