தலைநகரில் 25 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்! - DBKL அதிரடி!
- THINAGAREN SANGGAREN
- 10 Jul, 2026
ஜூலை 10,
சாலை போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக 25 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்துள்ளதாக கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது. நேற்று மாலை கோலாலம்பூர் காவல்துறை, சாலை போக்குவரத்து ஆணையம், கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் இணைந்து தலைநகரின் முதன்மை சுற்றுலா சாலைகளில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 132 சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட UNCHR அகதிகளும் அனுமதியின்றி மோட்டார் சைக்கிள்கள் பயன்படுத்துவதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் 23 மின் மோட்டார் சைக்கிளையும் , 2 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்துள்ளதாக கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் தெரிவித்துள்ளது. UNCHR அகதிகள் அடையாள அட்டையை வைத்திருந்த இருவரை மேலதிக விசாரணைகாக தடுத்து வைத்திருப்பதாகவும் கோலாலம்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



