கோலாலம்பூர் போக்குவரத்து நெரிசலை குறைக்க செயற்கை நுண்ணறிவு கட்டுப்பாட்டு மையம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 13-

கோலாலம்பூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், கோலாலம்பூர் மாநகர மன்றம் செயற்கை நுண்ணறிவு கட்டுப்பாட்டு மையத்தை உருவாக்கியுள்ளதாகக் கூட்டரசு பிரதேசங்களுக்கான பிரதமர் துறை துணை அமைச்சர் Datuk Lo Su Fui தெரிவித்தார்.

இந்த மையம், சாலை நெரிசலை கண்காணிப்பதோடு, போக்குவரத்து விளக்குகளின் நேரத்தையும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் நிர்வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சி கோலாலம்பூர் கட்டமைப்பு திட்டம் 2040 மற்றும் கோலாலம்பூர் உள்ளூர் திட்டம் 2040 ஆகியவற்றின் கீழ் உள்ள முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாகும் என்றார்.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான போக்குவரத்து விளக்குகள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

மேலும், பயண நேரத்தை கணக்கிடவும் செயற்கை நுண்ணறிவு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன என அவர் விளக்கினார்.

முன்பு போல, சிவப்பு விளக்கு எத்தனை நிமிடம், பச்சை விளக்கு எத்தனை நிமிடம் என்ற நிலையான முறையில் இது செயல்படாது என்றும் அவர் தெரிவித்தார்.

மாறாக, சாலைகளில் உள்ள வாகன இயக்கம், நெரிசல் நிலை மற்றும் பயண நேரம் போன்ற தரவுகளைக் கணக்கிட்டு, தேவைக்கேற்ப போக்குவரத்து விளக்குகள் செயல்படும்.

இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கேள்வி பதில் அமர்வில் Lo Su Fui இதனை தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *