டெலிவரி ரைடர்ஸுக்கு கூடுதலாக 50 லிட்டர் BUDI95 பெட்ரோல்
- Shan Siva
- 18 May, 2026
கோலாலம்பூர். மே 17: டெலிவரி ரைடெர்ஸ் எனப்படும் உணவு மற்றும் பொருள்களைக் கொண்டு செல்லும் ஓட்டுநர்களுக்கான மாதாந்திர BUDI95 பெட்ரோல் ஒதுக்கீட்டை 50 லிட்டர் அதிகரித்து 250 லிட்டராக உயர்த்துவது குறித்து அரசாங்கம் விவாதிக்க உள்ளது என பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறும் தேசிய பொருளாதார நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தில் இதை விவாதத்திற்கு முன்வைக்கப்போவதாக ஜொகூர் தெப்ராவில் நடைபெற்ற மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
தற்போதைய ஒதுக்கீட்டு வரம்பு குறித்து டெலிவரி ஓட்டுநர்களைச் சந்தித்து அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்த பின்னரே, இந்த ஆலோசனையைத் தாமே முன்வைத்ததாக அன்வார் கூறினார்.
மற்ற வாகன ஓட்டிகளைப் போலவே டெலிவரி ஓட்டுநர்களும் அதே மாதாந்திர ஒதுக்கீட்டைப் பெறுவதால், அவர்களின் நலனை உறுதி செய்வதற்காக இந்த விவகாரம் கவனமாக மதிப்பாய்வு செய்யப்படும். குறைந்தபட்சம் 50 லிட்டர் அதிகரித்து 250 லிட்டராக உயர்த்துவதற்கான வழியைக் கண்டுபிடிப்போம் என்று அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



