தந்தங்கள் பிடுங்கப்பட்ட நிலையில் கொலையுண்டு கிடந்த யானை

top-news
FREE WEBSITE AD

கோத்தகினபாலு, மே 19:  சப, கோத்தகினபாலு, டோங்கோடில் உள்ள ஒரு வனக் காப்பகத்தில், வேட்டையாடபப்ட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிகழ்வில், முகம் சிதைக்கப்பட்ட நிலையிலும் தந்தங்கள் இல்லாத நிலையிலும் ஒரு ஆண் போர்னியன் யானை இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுங்கை பினாங்கா வனக் காப்பகத்திற்குள் இந்த யானை கண்டுபிடிக்கப்பட்டது குறித்து சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் டத்தோ ஜாஃப்ரி அரிஃபின் ஆழ்ந்த கவலை தெரிவித்தார்.

சபா வனவிலங்குத் துறை (SWD) அதிகாரிகள், சமூக வனக் காவலர்கள் மற்றும் காவல்துறையினர் அடங்கிய ஒரு குழு நேற்று அந்த இடத்தை ஆய்வு செய்ததாக அவர் கூறினார்.

மே 17 அன்று மாலை 5.30 மணிக்கு அப்பகுதிக்கு அருகிலுள்ள தோட்டப் பணியாளர்கள் ஒரு பெரிய வெடிப்பு போன்ற சத்தத்தைக் கேட்டதாகக் கூறப்படுகிறது, ஆனால் கனமழை காரணமாக உடனடியாக ஆய்வு செய்ய முடியவில்லை.

மறுநாள் காலை 6.30 மணிக்கு, தோட்ட மேலாளர் கிளிஃப் அனக் எடிசன் விஃப்ரெட் சிபாட் மற்றும் அவரது பணியாளர்கள், தலை மற்றும் தந்தங்களின் சில பகுதிகள் இல்லாத நிலையில் அந்த யானையின் சடலத்தைக் கண்டுபிடித்தனர்.

இறப்பிற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும், பிரேத பரிசோதனை நடைபெற்று வருவதாகவும் ஜாஃப்ரி கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *