அமைச்சர் வீட்டுத் தீபாவளியில் அன்வார், சாஹிட், சைபூடின், அந்தோணி லோக்!

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 20,

இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் வீட்டில் தனது தீபாவளியைக் கொண்டாடியதாகப் பிரதமர் அன்வார் தெரிவித்துள்ளார். இன்று காலை கோபிந்த் சிங் வீட்டிற்குத் தமது துணைவியார் வான் அசிசாவுடன் சென்றதாக அன்வார் தெரிவித்தார். இந்த தீபாவளிச் சந்திப்பில் துணைப் பிரதமர் ZAHID HAMIDI , உள்துறை அமைச்சர் SAIFUDDIN NASUTION, போக்குவரத்து அமைச்சர் ANTHONY LOKE  என முக்கிய அமைச்சர்கள் பங்கேற்றனர். 

தீபாவளியைக் கொண்டாட இந்த ஆண்டு தமக்கு வாய்ப்பு உள்ளதால் இயன்ற வரையில் இந்த தீபாவளியைக் கொண்டாடவிருப்பதாக அன்வார் தெரிவித்துள்ளார். குடும்பத்துடன் தீபாவளியைக் கொண்டாட வேண்டிய முக்கியத்துவத்தைத் தாம் அறிந்திருப்பதாகத் துணைப் பிரதமர் ZAHID HAMIDI தெரிவித்தார். இந்த தீபாவளியைக் கோபிந்த் சிங் குடும்பத்துடன் கொண்டாடியது உணர்வுப்பூர்வமாக உள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் ANTHONY LOKE தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *