ஒற்றுமை தீபாவளி விருந்துபசரிப்பில் கல்வி அமைச்சர் & ஓம்ஸ் பா தியாகராஜன்

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 19.

PPR raya permai குடியிருப்புவாசிகள் ஏற்பாட்டில் தலைநகர் raya permai பொது மண்டபத்தில் ஒற்றுமை தீபாவளி விருந்தோம்பல் நடைபெற்றது. கல்வி அமைச்சர் Fadhlina Sidek, ஓம்ஸ் அறவாரியத்தின் தோற்றுநரும் மலேசிய அரிமா சங்கத்தின் தலைவருமான ஓம்ஸ்  பா.தியாகராஜன் ஆகியோரின் தலைமையில் கூட்டரசு வளாக பி.கே.ஆரின் உதவித் தலைவர் தியாகராஜ் சங்கரநாரயணன் ஏற்பாட்டில் 200 க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் ஒற்றுமை தீபாவளி விருந்தோம்பலில் பங்கேற்றனர்.

ஆசிரியரும் பாடகியுமான சுபாஷினி அருணாச்சலம் அவர்களுக்குக் கல்வி அமைச்சர் Fadhlina Sidek அணிந்திருந்த சால்வையைப் போர்த்தி கட்டியணைத்து தனது நெகிழ்வான பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்தார்.

கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரி தியாகராஜ் அவர்களின் அரசியல் எழுச்சி தமிழ்ப்பள்ளிகளுக்கு நல்லதோர் எதிர்காலத்தை விளைவிக்கும் என ஓம்ஸ் பா தியாகராஜன் நம்பிக்கை தெரிவித்தார். மலாய்க்காரர்களும் சீனர்களும் இந்த ஒற்றுமை தீபாவளி விருந்தோம்பலில் பங்கேற்றிருப்பது நல்லிணக்கத்தையும் மதச்சார்பின்மையையும் வெளிப்படுத்துவதாக ஓம்ஸ் அறவாரியத்தின் தோற்றுநரும் மலேசிய அரிமா சங்கத்தின் தலைவருமான ஓம்ஸ்  பா.தியாகராஜன் தெரிவித்தார்.

இந்தியர்கள் சீனர்கள் மலாய்க்காரர்கள் என அனைத்து சமூகத்தினரும் பங்கேற்ற இந்த தீபாவளி விருந்துபசரிப்பில் கல்வி அமைச்சரும் ஓம்ஸ் பா தியாகராஜன் ஆகியோர் பங்கேற்றத்து பெருமை அளிக்கும் வகையில் இருப்பதாகக் கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரியும் கூட்டரசு வளாக பி.கே.ஆர் உதவித் தலைவரும் செப்புத்தே பி.கே.ஆர் தலைவருமான தியாகராஜ் சங்கரநாரயணன் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *