800 இந்தியக் குடும்பங்களுக்குத் தீபாவளி உதவிப் பொருள்கள் வழங்கிய செகாமாட் பி.கே.ஆர் ஷாமளா!

top-news
FREE WEBSITE AD

தீபாவளியை முன்னிட்டு வசதி குறைந்த இந்திய குடும்பங்களுக்குத் தீபாவளி உதவிப் பொருள்களை வழங்கியிருப்பதாகச் செகாமாட் பி.கே.ஆர் தலைவரும் ஜொகூர் மாநிலப் பி.கே.ஆர் உதவித் தலைவருமான ஷாமளா வாசுதேவன். செகாமாட்டில் உள்ள 800 இந்தியக் குடும்பங்களுக்குப் பயனளிக்கும் வகையில் 200 ரிங்கிட் மதிப்பிலானப் பொருள்கள் அடங்கிய பெட்டிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் பள்ளி மாணவர்களுக்குத் தீபாவளி அங்பாவ் வழங்கப்பட்டதாகவும் செகாமாட்டில் உள்ள நல்லுள்ளங்களின் ஆதரவுடன் இந்த முயற்சியை முன்னெடுத்ததாக ஷாமளா வாசுதேவன் தெரிவித்தார். 


தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்தியக் குடும்பங்களுக்கு இந்த உதவிப் பொருள்கள் வழங்கி வருவதாகவும் நேற்று AYAMAS நிறுவனத்தின் Dato Jeevanthiran தலைமையில் நடைபெற்ற தீபாவளி விருந்துபசரிப்பில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியதாக ஷாமளா வாசுதேவன் தெரிவித்தார்.

செகாமாட் பெரிய மாவட்டம் என்பதால் வசதி குறைந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று இந்த உதவிப் பொருள்களை வழங்கி வருவதாக ஷாமளா வாசுதேவன் தெரிவித்தார். செகாமாட்டில் உள்ள வசதி குறைந்த இந்திய குடும்பங்களை அடையாளம் கண்டு 200 ரிங்கிட் மதிப்பிலான உதவிப் பொருள்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் ஷாமளா வாசுதேவன் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *