டெல்லியில் குண்டு வெடிப்பு! அன்வார் கண்டனம்!

top-news
FREE WEBSITE AD

நேற்றிரவு இந்தியாவின் தலைநகரான புதுடெல்லி செங்கோட்டையில் நிகழ்த்தப்பட்டிருக்கும் குண்டு வெடிப்பு மிகுந்த வருத்தத்தையும் துயரத்தையும் கொண்டதால் தனது வருத்தத்தையும் கண்டனத்தையும் பிரதமர்  Datuk Seri Anwar Ibrahim வெளியிட்டுள்ளார். திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கும் பயங்கரவாதத் தாக்குதலாக இதைத் தாம் கருதுவதாகவும் குண்டு வெடிப்பில் உயிரிழந்த 8 பேருக்கும் படுகாயம் அடைந்திருக்கும் 19 பேருக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் தனது வருத்தத்தைத் தெரிவிப்பதாக  Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார். 

இது ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என உறுதிப்படுத்தப்பட்டால் இந்திய அரசு கடுமையாகக் கண்டிக்க வேண்டும் என்றும் அப்பாவி பொதுமக்களின் உயிரைக் குறிவைத்து மேற்கொள்ளப்படும் இது மாதிரியான பயங்கரவாத்தில் எந்த நியாயத்தையும் நாம் சீர்தூக்கிப் பார்க்க முடியாது என பிரதமர்  Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *