பழைய பகை காரணமாக தாக்குதல் – விசாரணையில் கண்டுபிடிப்பு
- Surendran Sumdraraj
- 12 Mar, 2026
சுங்கை பட்டாணி, மார்ச் 12-
பழைய பகை காரணமாக ஏற்பட்டதாக நம்பப்படும் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், அவரது தங்கை கடுமையாகக் காயமடைந்த சம்பவம் கெடா மாநிலத்தின் தாமான் கெம்பாஸ் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அட்ஸ்லி அபு ஷா தெரிவித்ததாவது, இந்த சம்பவம் கடந்த முன்தினம் அதிகாலை, அவர்களது வீட்டின் முன்பாக நடந்ததாகக் கூறினார்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் நால்வர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
“சம்பவம் நடந்த உடனே இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர் நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் மேலும் ஒருவரைக் கைது செய்தோம்,” என்று அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட நபர் 22 வயதுடைய இளைஞர் என்றும், அவருக்கு முன்பு 10 குற்றப் பதிவுகள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் பயன்பாடு இருப்பதும் உறுதியாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபரின் தங்கை கடுமையாக காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



