கலகலப்பான வேடங்களில் நடிக்க ஆசை – ஐஸ்வர்யா ராஜேஷ்
- Surendran Sumdraraj
- 14 Jul, 2026
சென்னை, ஜூலை 14-
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ், ரசிகர்களை மகிழ்விக்கும் கலகலப்பான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடைசியாக வெளியான ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, அவர் நடித்துள்ள ‘ஓ சுகுமாரி’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. பரத் தர்ஷன் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தில், நடிகர் திருவீர் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் மகேஸ்வரா ரெட்டி மூலி படத்தைத் தயாரித்துள்ளார்.
காதல், நகைச்சுவை மற்றும் கிராமத்துப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில், யாராவது தொட்டால் மின்சாரம் தாக்குவதுபோன்ற விசித்திரமான குணம் கொண்ட பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். அந்த ரகசியத்தை மறைத்து அவருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்ட பின்னர் நடைபெறும் சம்பவங்களே படத்தின் கதையாக அமைந்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



