சலசலப்பில் தொடங்கிய முதல் நாள் நாடாளுமன்றம்! - தக்கியூடின் & அசாலீனா வாக்குவாதம்!
- Thinagaren Sanggaren
- 06 Oct, 2025
அக்தோபர் 6,
இன்று தொடங்கிய நான்காவது நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளில் பாஸ் கட்சியின் தக்கியுடீன் ஹசானுக்கும் சட்ட நிர்வாகச் சீர்திருத்த அமைச்சர் அசாலினா ஓத்மானுக்குமான வாக்குவாதத்தால் மக்களவையில் பதட்டமானச் சூழல் நிலவியது. நாட்டின் தலைமை நீதிபதிக்கும் அரசு வழக்கறிஞர்களுக்குமிடையில் சட்டத்துறை அமைச்சு குறிக்கிடுவதாகப் பாஸ் கட்சியின் தக்கியூடிந் ஹசான் குற்றச்சாட்டை முன்வைத்த போது சட்டத்திருத்த அமைச்சர் அசாலினா ஓத்மான் கடந்த 2020 இல் சட்டத் துறை அமைச்சராக இருந்த தக்கியூடின் தலைமை நீதிபதிக்கும் சட்டத்துறை தலைவருக்கும் இடையிலான அதிகாரப் பகிர்வில் அமைச்சரவையின் பங்களிப்பு இருக்க வேண்டும் என வலியுறுத்தியதால் அரசு வழக்கறிஞர் நியமனங்களில் அமைச்சரவை பங்கேற்றதாக அசாலினா ஓத்மான் தெரிவித்தார்.
கேள்வி கேட்டால் பதில் சொல்லாமல் அசாலினா ஓத்மான் தன் மீது குற்றம்சாட்டுவதாகத் தக்கியுடின் ஹசான் விவாதித்தில் ஈடுப்பட்டது நாடாளுமன்றச் சபாநாயகர் முதல் நாள் நாடாளுமன்றக் கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்த வேண்டாம் என்றும் மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைதியாக இருக்கும்படி வலியுறுத்தினார். கேள்வி அமைச்சரை நோக்கி நேரடியாகக் கேட்கப்பட்டுள்ளதால் அமைச்சர் அதற்கு பதிலளிக்க வேண்டும் என சபாநாயகர் தெரிவித்தார்.
அரசு தரப்பு வழக்கறிஞர் நியமனங்களில் அமைச்சரவையின் தலையீடுகள் இருப்பதாக எழும்பியிருக்கும் குற்றச்சாட்டில் எந்தவோர் உண்மையும் இல்லை என அசாலீனா மறுத்தார். அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நியமனத்தில் அமைச்சரவை தலையிடவில்லை என்றும் அதற்கான அவசியமும் ஏற்படவில்லை என்றும் நியமனங்களின் இறுதிப்பட்டியலை மாமன்னர் வெளியிட்ட பின்னரே அமைச்சரவையில் வழங்கப்பட்டதாக அசாலினா ஓத்மான் பதிலளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



