MIPP புனிதன் புரியாமல் பேசுகிறார்! – பாஸ் கட்சியின் DHPP சாடல்!
- Thinagaren Sanggaren
- 22 Sep, 2025
செப்டம்பர் 22,
பாஸ் கட்சியின் நீண்ட போராட்டத்தை அறியாமல் MIPP கட்சியின் தலைவர் புனிதன் கருத்து தெரிவித்திருப்பதாகப் பாஸ் கட்சியின் இஸ்லாம் அல்லாதவர் ஆதரவு குழுவான DHPP -யின் தலைமை தொடர்பாளர் Dr Balachandran Gopal Krishnan தெரிவித்தார். புனிதன் சொல்வது போல முகைதீனை விடவும் நம்பகமான தலைவர்கள் பாஸ் கட்சியின் இருக்கிறார்கள் என்பதை டாக்டர் பாலச்சந்திரன் நினைவூட்டினார். பாஸ் கட்சியைப் புனிதன் குறைத்து மதீப்பீடு செய்கிறார் என Dr Balachandran Gopal Krishnan தெரிவித்தார்.
பாஸ் கட்சியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட
போராட்டமும் சாதனைகளும் அரசியல் மட்டத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளதை Dr
Balachandran Gopal Krishnan MIPP புனிதனுக்கு
நினைவூட்டினார். புனிதன் அவரின் புதிய கட்சியை மேம்படுத்தவும் கட்சியினரை வலுப்படுத்தவும்
கவனம் செலுத்த வேண்டும் என Dr Balachandran Gopal Krishnan வலியுறுத்தினார். பாஸ்
கட்சியின் வலுவான அரசியல் ஆளுமையைக் கேள்விக்குறியாக்குவது புனிதனுக்கு நல்லதல்ல என
Dr Balachandran அறிவுருத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



