மலேசியாவின் பணக்காரர் பட்டியல்: ராபர்ட் கோக் முதலிடம்
- Surendran Sumdraraj
- 11 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 11-
ஹோட்டல் மற்றும் சொத்துத் துறையில் புகழ்பெற்ற தொழிலதிபர் ராபர்ட் கோக் (102) மீண்டும் மலேசியாவின் மிகப்பெரிய பணக்காரராக அறிவிக்கப்பட்டுள்ளார். உலகின் பணக்காரர்களை பட்டியலிடும் Forbes வெளியிட்ட புதிய பில்லியனர்கள் பட்டியலில் அவர் இந்த சாதனையைப் பெற்றுள்ளார்.
ஹொங்கொங்கில் தங்கியிருக்கும் கோக், 204-வது இடத்தில் இடம்பெற்றுள்ளார். அவருடைய மொத்த செல்வம் 14.2 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 55.7 பில்லியன் ரிங்கிட்) என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள மலேசியர்களில் உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளார்.
கடந்த ஆண்டில் அவரது செல்வம் 12.1 பில்லியன் அமெரிக்க டாலராக (47.5 பில்லியன் ரிங்கிட்) இருந்த நிலையில், இவ்வாண்டு அது அதிகரித்துள்ளது. எனினும், உலகளாவிய தரவரிசையில் அவர் கடந்த ஆண்டின் 101-ஆவது இடத்திலிருந்து 204-வது இடத்துக்குப் பின்னடைந்துள்ளார்.
இதே பட்டியலில் ராபர்ட் குவொக் உட்பட மொத்தம் 15 மலேசியர்கள் இடம்பெற்றுள்ளனர். உலகளாவிய வணிகத் துறையில் மலேசியர்களின் செல்வாக்கை இந்த பட்டியல் மீண்டும் வெளிப்படுத்துகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



