PN - BN உடன் நான் பேச்சுவார்த்தை நடத்தவில்லை
- Shan Siva
- 30 Apr, 2026
சிரம்பான். ஏப் 30: நெகிரி செம்பிலான் மாநில அரசுக்கு ஆதரவு பெற Barisan Nasional அல்லது Perikatan Nasional சட்டமன்ற உறுப்பினர்களுடன் எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று மாநில முதல்வர் Aminuddin Harun தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற மாநில நிர்வாகக் குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், BN உறுப்பினர்கள் தன்னிடம் இருந்து ஆதரவை வாபஸ் பெற்றதற்கான காரணத்தை அறிய மட்டுமே திங்கட்கிழமை சிலரை தொடர்புகொள்ள முயன்றதாக கூறினார். ஆனால் அவர்கள் தொலைபேசிகளை அணைத்து வைத்திருந்தததால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றார்.
மேலும், எந்தக் கூட்டணியுடனும் இணைந்து செயல்படுவது குறித்த முடிவு Anwar Ibrahim தலைமையிலான Pakatan Harapan உயர்மட்டத்தின் ஒப்புதலுடன் மட்டுமே அமையும் எனவும் அவர் கூறினார். மாநிலத்தில் PN உடன் இணைந்து கொண்டு, மத்திய அளவில் Umno உடன் இருப்பது பொருத்தமற்றதாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.
தற்போது 36 இடங்களைக் கொண்ட மாநில சட்டமன்றத்தில் Pakatan Harapan 17 இடங்களின் ஆதரவுடன் மட்டுமே ஆட்சி செய்து வருவதால், அரசு சிறுபான்மை நிலையில் இயங்கிவருகிறது. இதற்கிடையில், BN (14) மற்றும் PN (5) இரு தரப்பும் இணைந்தால் புதிய அரசை அமைக்க தேவையான எளிய பெரும்பான்மை கிடைக்கும் என்ற நிலையும் உள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



