சொத்துகள் இருப்பது எனக்குத் தெரியாது! இருந்தால் தெரியப்படுத்துங்கள்! MACC-யை கிண்டல் செய்த மகாதீர்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 11: இங்கிலாந்தில் தனக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் சொத்துக்களை MACC விசாரித்து வருவதாக மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அசாம் பாக்கி கூறியதை டாக்டர் மகாதிர் முகமது கேலி செய்துள்ளார்.

சொத்துக்கள் இருப்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்பதால், அவற்றைப் பற்றித் தெரிவிக்குமாறு தாம் கேட்டுக்கொள்வதாக மகாதிர் கேலியாகத் தெரிவித்துள்ளார்.

அப்படியே, சொத்துக்களை நான் உரிமை கோர முடியும் என்று எனக்குத் தெரியப்படுத்துங்கள். அவற்றைப் பெற்றவுடன், ஏழைகளுக்கு நன்கொடையாக வழங்குவேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் இந்த விசாரணை அரசியல் நோக்கம் கொண்டது என்று மகாதிர் கூறினார்.

முன்னதாக மகாதிர் மீதான விசாரணை நடந்து வருவதாகவும், தற்போது இங்கிலாந்தில் உள்ள சொத்துக்கள் மீது கவனம் செலுத்தப்படுவதாகவும் அசாம் செய்தியாளர்களிடம் கூறினார்.

மகாதிருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் சொத்துக்கள் தொடர்பாக எம்ஏசிசி இங்கிலாந்தில் உள்ள அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்ததாக அசாம் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *