லிம்மை நான் சிக்க வைக்கவில்லை” ராயர் கேள்விக்கு ஞானராஜா பதில்!
- Muthu Kumar
- 28 Aug, 2025
கோலாலம்பூர், ஆக.28-
கடலடி சுரங்கப் பாதை திட்டம் தொடர்பான வழக்கில் அதிகாரிகளுடன் சேர்ந்து பினாங்கின் முன்னாள் முதல்வர் லிம் குவான் எங்கை தாம் சதிவலையில் சிக்க வைத்ததாகக் கூறப்படுவதை வர்த்தகர் ஒருவர் கோலாலம்பூர், செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று மறுத்தார்.
லிம்மின் வழக்கறிஞர் ஆர்எஸ்என் ராயரின் குறுக்கு விசாரணையின்போது அரசுத் தரப்பு சாட்சியான ஜி.ஞானராஜா இதனைத் தெரிவித்தார். ஞானராஜா மீது தொடக்கத்தில் ஏமாற்று வேலையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால். அதன் பிறகு குறைந்த தண்டனைக்குரிய குற்றம் சுமத்தப்பட்டது. அதனை ஒப்புக் கொண்ட அவருக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டது. இதனைப் பார்க்குமிடத்து அதிகாரிகளுடன் அவர் சமரசம் செய்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது என்று ராயர் கூறினார்.
ஆனால், அக்கூற்றை நிராகரிப்பதாக ஞானராஜா குறிப்பிட்டார்.லிம் மீது எனக்கு எந்தவொரு விரோதமும் கிடையாது என்று வலியுறுத்திய அவர். கடலடி சுரங்கப் பாதை திட்டம் தொடர்பில் பணப் பட்டுவாடா விஷயங்களில் தாம் இடைத்தரகராக செயல்பட்டதாகக் கூறப்பட்டதையும் மறுத்தார்.
சக வர்த்தகரான ஸாருல் அமாட் ஸூல்கிப்ளி என்பவர் கடந்த 2017ஆம் ஆண்டில் எனக்கு ஒரு கோடியே 90 லட்சம் வெள்ளியை நட்பு அடிப்படையில் கடனாகக் கொடுத்தார். அதில் ஒரு கோடியே ஐம்பது லட்சம் வெள்ளியை சிஐஎம்பி வங்கிக் கணக்கில் வரவு வைத்தேன். எஞ்சிய நாற்பது லட்சம் வெள்ளி ரொக்கமாக கொடுக்கப்பட்டது. அதில் இருபது லட்சம் வெள்ளி லிம்முக்கான பணமாகும் என்றார் ஞானராஜா.
அத்திட்டத்தை ஸாருலின் நிறுவனத்திற்குப் பெற்றுத் தருவதற்காக 33 லட்சம் வெள்ளியை முன்னாள் நிதியமைச்சர் லிம் லஞ்சமாகப் பெற்றதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நீதிபதி அஸூரா அல்வி முன்னிலையில் இன்றும் இவ்வழக்கு தொடரும்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



