சபா அம்னோ தலைவராக டத்தோ ஜாப்ரி அரிபின் நியமனம்
- Tamil Malar (Reporter)
- 10 Dec, 2025
கோத்தா கினபாலுவ் டிச. 10-
சபா மாநில அம்னோ தலைவராக புதிதாக நியமிக்கப்பட்ட டத்தோ ஜாப்ரி அரிபின், கட்சியின் பங்கையும் மக்களுடனான உறவையும் மேலும் வலுப்படுத்துவதற்கு உறுதியளித்துள்ளார். “மாநில மக்களின் நலன்களைத் தொடர்ந்து போராடும் கட்சியாக அம்னோ இருக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.
சபா சுற்றுலா, கலாச்சாரம், சுற்றுச்சூழல் அமைச்சருமான ஜாப்ரி, கட்சியின் அமைப்பு ரீதியான செயல்பாடுகளை மேம்படுத்தி, அனைத்து நிலைகளிலும் பணிகளை ஒழுங்குபடுத்தி மேற்கொள்வதில் உறுதியாக உள்ளார்.
தமது நியமனத்தை “பெரும் பொறுப்பு” என்று குறிப்பிட்ட அவர், சபா அம்னோவின் அனைத்து நிலைத் தலைவர்களும் உறுப்பினர்களும் ஒன்றுபட்டு, வரிசையை இறுக்கி, முழு ஆதரவை வழங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
“அம்னோ சபா மக்களுக்காகப் போராடும், மதிக்கப்படும், தொடர்புடைய அரசியல் தளமாக மாற வேண்டும்; மாநில அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



