பெல்க்ரா 2025 நிதியாண்டில் 15 விழுக்காடு டிவிடெண்ட்
- Tamil Malar (Reporter)
- 18 Dec, 2025
கோலாலம்பூர், டிச. 18-
பெல்க்ரா, 2025 நிதியாண்டுக்கான செயல்பாட்டு அடிப்படையிலான டிவிடெண்ட் 15 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி , இந்த டிவிடெண்ட் விகிதம் பெல்க்ராவின் ஒழுக்கமான லாபத்தைப் பேணுதல், கடுமையான கண்காணிப்பு ஆகியவற்றை பிரதிபலிக்கிறது. இதன் மூலம் கூட்டுறவு, அதன் துணை நிறுவனங்கள் தொடர்ந்து நிலையான செயல்திறனைப் பதிவு செய்யும் என உறுதிப்படுத்தப்படுகிறது என்று கூறினார்.
மேலும் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சருமான அவர், கூட்டுறவின் நிதி செயல்திறனுக்கு வெளிப்படைத்தன்மை அடிப்படையாக இருக்க வேண்டும் என்றார். உறுப்பினர்களின் நலனுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இந்த கூட்டுறவு லாபம் மட்டுமல்லாமல், நிர்வாகம், உறுப்பினர்களுக்கான பயன்களிலும் சிறந்த முன்மாதிரியாக தொடர வேண்டும் என தாம் விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



