தனுஷ் படத்தில் படிக்க 'அட்ஜஸ்ட்மென்ட்' - மறுத்த கயல் நாடக நடிகை!
- Muthu Kumar
- 19 Nov, 2025
பிரபலமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்ததன் மூலம் கவனம் பெற்ற நடிகை மான்யா ஆனந்த், சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில், நடிகர் தனுஷின் பட வாய்ப்பு தொடர்பாகப் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
'வானத்தைப் போல', 'கயல்' போன்ற சீரியல்கள் மூலம் பிரபலமான மான்யா, தனுஷின் மேலாளர் ஷ்ரேயஸ் என்பவரின் பெயரில் தனக்கு அழைப்பு வந்ததாகக் கூறினார்.
அப்போது, தனுஷ் படத்தில் நடிக்க வேண்டுமென்றால், "அட்ஜஸ்ட்மென்ட்" செய்ய வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டதாகவும், அதற்குத் தான் மறுத்தபோது, "தனுஷ் என்றால் கூட அட்ஜஸ்ட்மென்ட் செய்ய மாட்டீர்களா?" என்று அந்தக் குறிப்பிட்ட நபர் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். மேலும், தாங்கள் நடிகர்கள்,வேறு தொழில் செய்பவர்கள் இல்லை என்றும் அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.
இந்த காணொளி சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாகப் பரவி, பெரும் விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், நடிகர் தனுஷின் மேலாளரான ஷ்ரேயஸ் உடனடியாக ஒரு விளக்கத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அதில், நடிகை மான்யா ஆனந்த் கூறியதுபோல், தன் பெயரிலோ அல்லது தாங்கள் சார்ந்த 'வுண்டர்பார் பிலிம்ஸ்' பெயரிலோ எந்தவொரு "Casting call" அழைப்பும் வரவில்லை என்றும், அது முற்றிலும் பொய்யானது என்றும் அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
மேலும், அந்த அழைப்புக்கு பயன்படுத்தப்பட்ட தொலைபேசி எண் (+91 75987 56841) தன்னுடையது கிடையாது என்றும், தனது புகைப்படம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டு, நடிகையின் குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார். இந்தச் சர்ச்சை குறித்துத் திரைத்துறையிலும், ரசிகர்கள் மத்தியிலும் விவாதங்கள் நீடித்து வருகின்றன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



