ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக தி.மு.க. தாக்கல் செய்த வழக்கு; சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
- Surendran Sumdraraj
- 06 Jul, 2026
புதுடெல்லி, ஜூலை 6 –
தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக தி.மு.க. தாக்கல் செய்துள்ள வழக்கு தொடர்பான மனு, உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.
கரூர் சம்பவம் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட கருத்துகள் அவதூறானவை என்றும், நீதிமன்ற உத்தரவுகளை மீறும் வகையில் இருப்பதாகவும் கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது.
இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ள நிலையில், நாளைய விசாரணையில் வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கு, கரூர் சம்பவம் தொடர்பான அரசியல் சர்ச்சையை மேலும் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தின் விசாரணை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



