முகைதீனின் தீர்க்கப்படாத பிரச்னைகளால் பாஸ் அதனுள் சிக்கிக் கொள்ள விரும்பாது! - அரசியல் ஆய்வாளர் கருத்து

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 23: பெர்சாத்து தலைமைப் போராட்டத்தில் பாஸ் கட்சி ஒரு பக்கமாக சாய்ந்து வருவதாக மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற அரசியல் ஆய்வாளர் அஹ்மத் ஃபௌசி அப்துல் ஹமீத் தெரிவித்துள்ளார்,

பாஸ் கட்சி முகைதீன் யாசினை விட பெர்சாத்து துணைத் தலைவர் ஹம்சா ஜைனுடினை விரும்புகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெரிகாத்தான் நேஷனலின் பிரதமர் வேட்பாளராக முகைதீனை பாஸ் மறைமுகமாக நிராகரித்ததைத் தொடர்ந்து இது நடந்தது. அதோடு, பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங், கட்சி 70 வயதுக்குட்பட்ட ஒருவரை விரும்புவதாகக் கூறியதையும் அவர் நினைவூட்டினார்.

முகைதீனின் நீதிமன்ற வழக்குகள் அல்லது மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தால் தேடப்படும் பெர்சாத்து தலைவரின் மருமகன் அட்லான் பெர்ஹான் தொடர்பான தீர்க்கப்படாத பிரச்சினைகளால், பாஸ் அதனுள்  சிக்கிக் கொள்ள விரும்பாது என்று அவர் கூறினார்.

அடுத்த பொதுத் தேர்தலை நோக்கிச் செல்லும்போது, ​​பாஸ் அதன் நேர்மை, சுத்தமான கட்சி என்ற நற்பெயரை நம்பி இருப்பதாக அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *