மரத்தில் மோதி நொறுங்கிய வாகனம்! மருத்துவர் பலி!

- Sangeetha K Loganathan
- 05 Jun, 2025
ஜூன் 5,
கட்டுப்பாட்டை இழந்த சொகுசு வாகனம் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் வாகனமோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்று அதிகாலை Bayan Lepasஇல் உள்ள Tun Dr Awang சாலையில் இந்த விபத்து நிகழ்ந்ததாக Barat Daya மாவட்டக் காவல் ஆணையர் Sazalee Adam தெரிவித்தார். இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி படுகாயம் அடைந்துள்ளதாகவும் உயிரிழந்த வாகனமோட்டி ஒரு மருத்துவர் என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் Barat Daya மாவட்டக் காவல் ஆணையர் Sazalee Adam தெரிவித்தார்.
எதிரில் சென்றுக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளைக் கவனிக்காத வாகனமோட்டி தவிர்க்க முயற்சித்தும் மோட்டார் சைக்கிளை மோதியதுடன் சாலையோரம் இருந்த மரத்தையும் மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. உயிரிழந்தவர் அரசு மருத்துவமனை மருத்துவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவரின் உடல் பினாங்கு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் Barat Daya மாவட்டக் காவல் ஆணையர் Sazalee Adam தெரிவித்தார்.
Seorang doktor maut selepas kereta mewah yang dipandunya hilang kawalan lalu merempuh motosikal dan pokok di Bayan Lepas, awal pagi tadi. Mangsa disahkan meninggal di tempat kejadian manakala penunggang motosikal cedera parah.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *