கோயில்களை ஹராம் என அடையாளப்படுத்த தடை! – சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் கண்டனம்!

top-news
FREE WEBSITE AD

ஜனவரி 26,

கோயில்களை எந்தவொரு தரப்பினரும் அமைப்புகளும் ஹராம் என அடையாளப்படுத்த கூடாது என சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு திட்டவட்டமாகத் தெரிவித்தார். சிலாங்கூரில் இஸ்லாம் அல்லாத இந்து,பௌத்தம், கிறிஸ்தவம், சீக்கியம்,தாவோயிஸ்ட் ஆகிய 5 மத விவகாரங்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் LIMAS எனும் துறையின் இணைத் தலைவர் எனும் அடிப்படையில் கோயில்களை ஹராம் என வகைப்படுத்தும் எந்தவோர் அமைப்பையும் அரசு அங்கீகரிக்காது என பாப்பாராய்டு தெரிவித்தார்.

வழிபாட்டுத் தலங்கள் வெறும் இயல்பானக் கட்டுமானங்கள் அல்ல. அது இன மத சமய வரலாறுகளுடன் ஆழமான அர்தத்தைக் கொண்டது. அவற்றை இழிவுப்படுத்தும் சொற்களைக் கொண்டு அடையாளப்படுத்துவது பொருத்தமற்றது என்றும் இதனால் தவறானப் புரிதல்களையும் பதற்றத்தையும் ஏற்படுத்தும் என பாப்பாராய்டு தெரிவித்தார். பல்லின மக்கள் நட்புடன் வாழும் சிலாங்கூரில் சமூக நல்லிணக்கமும் பல்லினத்துவமும் நிலைத்திருக்க வேண்டும் என்பதால் இது போன்ற மோசமான, பொறுப்பற்ற சொல்லாடல்களைப் பயன்படுத்த வேண்டாம் என பாப்பாராய்டு வலியுறுத்தினார்

மேலும் அனைத்து வகையிலான வழிபாட்டுத் தலங்களின் நிர்வாக விவகாரங்கள் அதன் உள்ளூர் நகராண்மைக் கழகத்தாலும் மாவட்ட அலுவலகத்தாலும் முறையாக அடையாளம் காணப்பட்டு அதிகாரச் சட்டத்துடன் தொடர்புடையது என்பதால், குறிப்பிட்ட தனிநபருக்குப் புகார் அளிக்க மட்டுமே வாய்ப்புள்ளது என்றும் தேவையற்ற தலையீடுகளால் இந்த விவகாரம் சமூகங்களுக்கிடையில் பதற்றத்தை ஏற்படுத்தும் என பாப்பாராய்டு தெரிவித்தார்.

நாட்டில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதன் வரலாறு பின்னணிகளுடன் நாம் ஆராய்ந்து முடிவுகள் எடுக்க வேண்டும் என்பதால் எந்தவொரு சமூகமும் பாதிக்கப்பட கூடாது என்பதிலும் அரசு தெளிவாக இருப்பதாக பாப்பாராய்டு தெரிவித்தார். இதில் உள்ளூர் மேம்பாடு சமூக வளர்ச்சி, நில நிர்வாகப் பிரச்சனைகள் என பல்வேறு காரணங்கள் உள்ளது. இதற்கு சுமூகமான தீர்வுகளை வழங்க முழுமையான ஆய்வுகளும் தேவை. கோயில்களை ஹராம் என வகைப்படுத்த கூடாது என்பதில் அரசு முடிவாக இருக்கிறது என்றும் அதே வேளையில் நிலப்பிரச்சனைகளை எதிர்நோக்கியிருக்கும் கோயில்களையும் அடையாளம் காண வழிவகுக்கும்படியான முன்னெடுப்புகளையும் தீவிரம் காட்ட வேண்டும் என பாப்பாராய்டு தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *