கோயில் விவகாரம்! தேசிய இந்து ஆலயச் செயற்குழு பிரதமரின் அரசியல் செயலாளருடன் நேரடி சந்திப்பு!

top-news
FREE WEBSITE AD

மார்ச் 14,

நாட்டில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள வழிபாட்டுத் தலங்கள் குறித்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டிருக்கும் நிலையில் இதற்கு ஒரு சுமூகமானத் தீர்வு வேண்டும் என்பதற்கு நீண்ட காலத் திட்டம் வேண்டும் என பிரதமரின் அரசியல் செயலாளர் CHAN MING KAI யிடம் தேசிய இந்து ஆலயச் செயற்குழு நேரில் சந்தித்து கோரிக்கையை முன்வைத்துள்ளது. நாட்டிலுள்ள இந்து அமைப்புகள் ஒன்றிணைந்து பதிவு செய்யாமல் இயங்கி வரும் இந்து வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என்றால் அரசாங்கத்தின் ஒத்துழைப்பு முக்கியம் என  தேசிய இந்து ஆலயச் செயற்குழு தெரிவித்துள்ளது. இந்த கோரிக்கையை முன்வைப்பதன் மூலம் கோயில்கள் தொடர்பான பல்வேறு சிக்கல்கள் தீர்க்கப்படும் என மலேசிய இந்து வழக்கறிஞர்கள் மன்றத்தின் துணைத் தலைவர் டத்தோ முருகேசன் நம்பிக்கை தெரிவித்தார்.


இது குறித்து விரிவான கலந்தாய்வுகள் நடத்தப்பட்ட பின்னர் கடந்த 12 மார்ச் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வாரின் அரசியல் செயலாளரான CHAN MING KAI யிடம் விளக்கமளிக்கப்பட்டதாகவும் மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்ததாகவும் வழக்கறிஞர் டத்தோ முருகேசன் தெரிவித்தார். பிரதமருக்கு நேரடியாக இந்த பிரச்சனைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டிருப்பதாகவும் இந்த பிரச்சனைக்கான தீர்வுகள் குறித்தும் முழுமையான விளக்கம் அளிக்கப்பட்டிருப்பதாகவும் தேசிய இந்து ஆலயச் செயற்குழு தெரிவித்துள்ளது.


அரசு நிலத்திலோ, தனியார் நிலத்திலோ முறையாகப் பதிவு செய்யாமல் இயங்கும் வழிபாட்டுத் தலங்களை KOIL HARAM என குறிப்பிடக் கூடாது என்றும், அரசு நிறுவனங்கள் கோயில் ஹராம் எனும் வார்த்தையைப் பயன்படுத்த கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டிருப்பதாக தேசிய இந்து ஆலயச் செயற்குழு தெரிவித்துள்ளது. முறையாகப் பதிவு செய்யாமல் ஒரு கோயில் இயங்குகிறது என்றால் அதனை KOIL TANPA PENDAFTARAN TANAH அதாவது நிலப் பதிவு இல்லாத கோயில் எனும்படியாகப் பொருள்படும் சொற்களைப் பயன்படுத்தும்படியும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வாரின் அரசியல் செயலாளரான CHAN MING KAI யிடம் வலியுறுத்தப்பட்டிருப்பதாக தேசிய இந்து ஆலயச் செயற்குழு தெரிவித்துள்ளது.  


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *