கோலாலம்பூர், பிப். 25-
பெர்சத்து கட்சியின் துணைத் தலைவர் டத்தோ டாக்டர் ராட்சி ஜிடின், மலாக்கா மாநில பெர்சத்து தலைமை அமைப்பின் புதிய தலைவராக உடனடியாக அமலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர், நேற்று பதவி விலகிய தான் ஸ்ரீ ரஹீம் தம்பி சிக் அவர்களுக்குப் பதிலாக இந்தப் பொறுப்பை ஏற்கிறார். கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தைத் தொடர்ந்து ரஹீம் தனது பதவியை விலக்கிக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
பெர்சத்து கட்சியின் பொதுச்செயலாளர் டத்தோ ஸ்ரீ முகமது அஸ்மின் அலி வெளியிட்ட அறிக்கையில், ராட்சி புத்ராஜயா நாடாளுமன்ற உறுப்பினராகவும் அனுபவம் வாய்ந்த தலைவராகவும் உள்ளதால் இந்த நியமனம் செய்யப்பட்டதாகக் கூறினார்.
புதிய தலைமுறையைச் சேர்ந்த உறுதியான தலைவர்களை உருவாக்கி, கட்சியின் கொள்கை மற்றும் இலட்சியப் போராட்டத்தை வலுப்படுத்தும் திறன் ராட்சிக்கு உள்ளதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.



