நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி எனக்கு பெரிய பாடம்: அமினுடின் ஹருன்
- Surendran Sumdraraj
- 07 May, 2026
நெகிரி செம்பிலான், மே 7-
நெகிரி செம்பிலான் மாநில அரசியலில் சமீபத்தில் ஏற்பட்ட பரபரப்பான சூழ்நிலை தனது அரசியல் வாழ்க்கையின் மிகவும் சவாலான தருணமாக இருந்ததாக மாநில முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருன் தெரிவித்துள்ளார்.
அவரது முதலமைச்சர் பதவி அச்சுறுத்தலுக்குள்ளான அந்த அரசியல் நெருக்கடி, தனது தலைமைத்துவ பார்வையை மாற்றிய மிகப்பெரிய அனுபவமாக அமைந்ததாகவும் அவர் கூறினார்.
பக்காத்தான் ஹராப்பான் (PH) கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நெகிரி செம்பிலான், பரோயில் உள்ள துவாங்கு அப்துல் ரஹ்மான் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் பக்காத்தான் ஹராப்பான் பொதுச்செயலாளர் டத்தோ ஸ்ரீ சைபுடின் நசூத்தியோன் இஸ்மாயில், டிஏபி பொதுச்செயலாளர் அந்தோணி லோக் மற்றும் அமானா தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் சாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அமினுடின், “இந்த சம்பவம் ஒரு சாதாரண அரசியல் பிரச்சினை அல்ல. இது எங்களுக்கு ஒரு பாடமாகும். வரலாற்றில் இது முக்கியமான அனுபவமாகப் பதிவு செய்யப்படும். இதன் மூலம் கட்சியை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்துள்ளோம்,” என்றார்.
மேலும், இந்த சம்பவம் அடுத்த பொதுத்தேர்தலை எதிர்கொள்ள பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியினர் இப்போதே தயாராக இருக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



