போதைப்பொருளுடன் மலேசிய எல்லையில் இருவர் கைது!

top-news

மே 15,

தாய்லாந்திலிருந்து மலேசியாவுக்குள் நுழையும் எல்லை பகுதியில் 80 பொட்டலங்களுக்குள் கஞ்சா வகை போதைப்பொருளைக் கடத்திய இருவரைக் காவல்துறை கைது செய்திருப்பதாகக் கெடா மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Fisol Salleh தெரிவித்தார். மாலை 5 மணிக்குச் சந்தேகத்திற்குரிய HILUX வாகனத்தைச் சோதனையிட்ட போது இந்த 45.5 கிலோ எடையிலானப் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதை Datuk Fisol Salleh உறுதிப்படுத்தினார்.

சோதனையின் போது வாகனத்திலிருந்த இருவரில் ஒருவர் உள்ளூர் ஆடவர் என்றும் மற்றொருவர் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் RM1.6 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டிருக்கும் 29 வயதான உள்ளூர் ஆடவர் தாய்லாந்திலிருந்து மலேசியாவுக்குப் பொருள்களைக் கொண்டு வருவதை ஒப்புக் கொண்ட நிலையில் தாய்லாந்து ஆடவர் Bukit Kayu Hitam வழியாகவும் Sungai Golok வழியாகவும் போதைப்பொருளைக் கடத்தியிருப்பதையும் வாக்குமூலமாக அளித்துள்ளதாகவும் 29 வயதான உள்ளூர் ஆடவர் methamphetamine போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதிச் செய்யப்பட்டிருப்பதாகவும் கெடா மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Fisol Salleh தெரிவித்தார்.

Dua lelaki, seorang warga tempatan dan seorang dari Thailand, ditahan di sempadan Malaysia kerana cuba menyeludup 45.5kg ganja bernilai RM1.6 juta. Seorang suspek mengaku membawa dadah dari Thailand dan disahkan positif methamphetamine.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *